படத்துக்குப் படம் கெட்டப் மாற்றுவதில் ஆரம்ப காலத்திலேயே கமலுக்கு இணையான ஆர்வம் காட்டியவர் 'தல' அஜீத்.
சிட்டிசன், வரலாறு போன்ற படங்களில் அவரது வித்தியாசமான தோற்றம் 'அட' சொல்ல வைத்தது.
அதற்குப் பின் கொஞ்ச காலம் 'அஜீத்'தாகவே வந்து போன அஜீத்துக்கு மீண்டும் வித்தியாசமான கெட்டப்பில் வர ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது அவரது நண்பர் சரண் இயக்கும் 'அசல்' படத்தில்.
இந்தப் படத்துக்காக அருவா மீசையும் அசத்தல் லுக்குமாக வரப்போகிறாராம் அஜீத். விருமாண்டியில் கமல் வருவாரே அந்த மாதிரி. இந்தப் படத்தில் பிரபுவும் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.
மார்ச்சில் படப்பிடிப்பு துவங்குகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்தப் படத்தின் மூலம் அஜீத் - சரண் கூட்டணி, மீண்டும் தங்களை ஒரு வசூல் கூட்டணி என நிரூபிக்க சகல முஸ்தீபுகளுடனும் களமிறங்குகிறது.
மார்ச்சிலேதான் படப்பிடிப்பு. ஆனால் இப்போதிலிருந்தே விருமாண்டி மீசையோடு திரிகிறார் அஜீத். அழகுக்கு அழகு சேர்க்கும் இந்த மீசையை 'அசல்' படப்பிடிப்பு முடியும் வரை தொடர்வாராம் தல! (மேலதிக புகைப்படங்களுக்கு இங்கேசொடுக்கவும் )
இதற்கிடையில் சம்பளத்தை குறைக்க நடந்த பேச்சு வார்த்தையில் பெரும் வெற்றி. சுமார் இரண்டு கோடி வரை தனது சம்பளத்தை குறைத்துக் கொள்ள சம்மதித்திருக்கிறார் அஜீத். காக்காய் உட்கார கள்ளு பானை உடைஞ்சு விழுந்த மாதிரி, இந்த சம்பளக் குறைப்புக்கு பிறகு ஒட்டு மொத்த தமிழ் சினிமா ஹீரோக்களும் தனது சம்பளத்தை குறைத்துக் கொள்ள முன் வந்திருக்கிறார்களாம்.