பெங்களூர் ஏர்-ஷோவில் அஜீத்!


பெங்களூர் எலஹங்கா விமானப்படை மைதானத்தில் நடக்கும் ஏரோ இந்தியா சர்வதேச விமாணக் கண்காட்சியான 'ஏர் ஷோ-2009', விமானங்களுடன் சேர்த்து 'நட்சத்திரங்களின்' வருகையால் மிகக் கலர்புல்லாக காட்சியளிக்கிறது.

அங்கு சாகஸங்களை நிகழ்ச்சி வரும் சர்வதேச போர் விமானங்கள், காட்சி அரங்குகளிலும் வைக்கப்பட்டுள்ள விமானங்கள், ரேடார்கள், ஏவுகணைகளைக் காண முன்னணி திரை/ விளையாட்டு நட்சத்திரங்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

நடிகர் அஜீத் தனது மனைவி ஷாலினி மற்றும் ஒருவயது மகள் அனோஷ்காவுடன் ஏர்ஷோவை கண்டுகளித்தார். காதுவரை நீண்ட மீசை, கறுப்பு கோட் சூட்டில் அசத்தலாக வந்த அஜீத், சும்மா ஓரிடத்தில் நின்று வேடிக்கைப் பார்க்கவில்லை.

கையோடு கொண்டு வந்திருந்த கேமிராவுடன் புகைப்படக்காரர்களுடன் ஒருவராக களத்தில் குதித்து விமானங்களை 'சுட்டுத் தள்ளினார்'.


நிருபர்கள் அடையாளம் கண்டுகொண்டுவிட்டு அவரை படமெடுக்க ஆரம்பித்தனர். அட, நாம எப்பவும் கிடைப்போமே.. இந்த ஷாட்ஸ் கிடைக்குமா என்று தனக்கு மேலே பறந்த சுகோய்-30எம்கேஐ விமானத்தை ஆர்வமாகப் படம்பிடித்துக் கொண்டிருந்தார் அஜீத்.


நாளை ப்ரியங்கா சோப்ரா, லாரா தத்தா மற்றும் 'கிரிக்கெட் தொழிலதிபராக' புது அவதாரம் எடுத்துள்ள ப்ரீத்தி ஜிந்தா ஆகியோர் ஏர்ஷோவுக்கு வருகிறார்களாம்.

அப்ப, நிச்சயமா யாரும் ஏர்ஷோவைப் பார்க்கப் போறதில்லை!!
 

Copyright 2010 All Rights Reserved Designed by Manibharathi Powered by HostingPalace