சென்னையின் இன்றைய பரபரப்பு ‘அரசன்’ பட போஸ்டர்கள் தான். சென்னை நகர் முழுக்க ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் தான் இப்போது ரஜினி ரசிகர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் ஹாட் டாபிக்.
மேற்கூறிய போஸ்டர் அநேகமாக சூப்பர் ஸ்டார் நடித்த ஏதாவது ஒரு ஹிந்தி படத்தின் தமிழாக்கத்தின் போஸ்டராகத்தன் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
போஸ்டரில் காணப்படும் வாசகங்கள் “Black Man - Big History” என்பதற்கு ஏற்ப அமெரிக்க அதிபர் ஒபாமாவின் படமும் சூப்பர் ஸ்டாரின் படமும் இருபுறமும் காணப்படுகிறது. இருவரும் அடிப்படையில் கருப்பு நிறம் என்பதை இது குறிக்கிறது.
சும்மா பரபரப்புக்காக ஒபாமாவின் படம் சேர்க்கப்பட்டு அச்சிடப்பட்டுள்ளது. மற்றபடி மேற்படி டப்பிங் படத்திற்கும் ஒபாமாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரும் கருப்பு நம் தலைவரும் கருப்பு என்பது சௌகரியமான ஒற்றுமையாய் போய்விட்டது அவ்வளவுதான். இருவரும் தத்தங்கள் துறையில் சாதித்தவர்கள் என்பது கூடுதல் சிறப்பு.
அதுமட்டுமல்லாது, “இன்று வேட்டை, நாளை கோட்டை” என்ற பன்ச் டயலாக் வேறு சும்மா மிரட்டுகிறது. அதற்க்கு கீழே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எங்கள் ‘அரசன்’ -The Don என்று காணப்படுகின்றது.
ஒரு டப்பிங் படத்தின் போஸ்டரே இவ்வளவு பரபரப்பு கிளப்புகிறது என்றால், அது நம் சூப்பர் ஸ்டார் ஒருவருக்காக மட்டுமே இருக்க முடியும்.
உங்கள் பார்வைக்கு போஸ்டர்களில் சில:
டிஸ்க்கி:
அரசன் - சுல்தான் தி வாரியர் படத்தின் தமிழ் வடிவ பேராக கூட இருக்கலாம்