புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும் புரட்சி வீரன் ரஜினியும்!!


சூப்பர் ஸ்டார் தொடர்பான எத்தனையோ போஸ்டர்களை நாம் பார்த்திருக்கிறோம். பிறந்த நாள், பட ரிலீஸ், பட பூஜை, திருமண நாள் இப்படி பல தரப்பட்ட நாட்களுக்கு பலவிதமான போஸ்டர்களை நம் ரசிகர்கள் எழுப்புவர்.

ஆனால் சென்னையில் ஓட்டேரி மற்றும் புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காணப்பட்ட இந்த போஸ்டர் இது வரை நாம் பார்த்த போஸ்டர்களுள் சிறந்த ஒன்று என்று தாராளமாக சொல்லலாம். போஸ்டரில் புரட்சி ஏற்படுத்தும் திருச்சி ரசிகர்களுக்கு கூட இது தோன்றாதது ஆச்சரியம் தான்.

அப்படி என்ன இந்த போஸ்டரில் விஷேஷம் என்கிறீர்களா?

சுமார் 38 ஆண்டுகளுக்கு முன்பு (1970) புரட்சி தலைவர் எம்.ஜி.யாரை வைத்து முரசொலி மாறனின் தயாரிப்பில் வெளியான படம் எங்கள் தங்கம். அதில் எம்.ஜி.யாருக்கு ஜோடி ஜெயலலிதா.

இன்று 2009 இல் முரசொலி மாறனின் புதல்வன் கலாநிதி மாறனின் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் எந்திரன். “History repeats itself” என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. வரலாறு புதிதாக பிறப்பதில்லை. அது திரும்ப திரும்ப நடக்கூடிய ஒன்று என்று அதற்க்கு அர்த்தம்.

போஸ்டர் கூறும் செய்தி என்ன?

“அன்று முரசொலி மாறன் தயாரிப்பில் புரட்சி தலைவரின் எங்கள் தங்கம்.

இன்று கலா நிதி மாறன் தயாரிப்பில் புரட்சி வீரனின் எந்திரன் - வெற்றியடைய வாழ்த்துகிறோம்.”

தற்போது புரட்சி தலைவரைப் போல மக்கள் மனதில் சிம்மாசனமிட்டு வீற்றிருக்கும் சூப்பர் ஸ்டாரின் எந்திரன் படத்தை கலாநிதி மாறனின் தயாரிப்பது என்ன ஒரு ஒற்றுமை…!! வாவ்….!!!! இதை கண்டுபிடித்து போஸ்டர் எழுப்பிய அந்த ரசிகர்களுக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.


அதுமட்டுமா, அமரர் எம்.ஜி.யாருக்கு எப்படி என்றும் நினைவில் நிற்கும்படி ‘புரட்சி தலைவர்’ என்று ஒரு பெயர் அமைந்ததோ அதே போல தமிழகத்தில் நாளை அரசியல் புரட்சி ஏற்படுத்தப் போகும் சூப்பர் ஸ்டாருக்கும் இப்போதே ஒரு அருமையான பெயரை சூட்டியுள்ளனர் இந்த ரசிகர்கள்.
 

Copyright 2010 All Rights Reserved Designed by Manibharathi Powered by HostingPalace